வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, காந்திநகர் ரவுண்டானா ஆக்சிலியம் கல்லூரிக்கு செல்லும் சாலையில் கடந்த மழைக் கால நேரத்தில் அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தந்த மாவட்ட ஆட்சியர் இந்த சாலையின் அவல நிலையை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து இந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்களின் மற்றும் பள்ளி கல்லூரி மாணவர்களின் நலன் கருதி உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து நிதி ஒதுக்கீடு செய்து சாலை அமைத்து சாதனை படைத்தனர்.
இந்த சாலையை அமைத்து ஒரு வருடங்கள் கூட ஆகாத நிலையில் சில மாதங்களே ஆன இச்சாலை தற்போது மிகவும் பழுதடைந்து குண்டும் குழியுமாக, குட்டையும் நீருமாக, சேரும் சகதியமாக, தற்போது காட்சியளிக்கிற அவலநிலையும், சில நேரங்களில் விபத்துகள் ஏற்படும் நிலையும், வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமத்தையளிக்கும் வகையில் அமைந்துள்ளது. மழைக்காலங்களில் சொல்லவே தேவையில்லை, என்னதான் சாலை வரி கட்டினாலும் சாலைப் பழுதுகளால் வாகன விபத்துகளில் வாகனங்கள பழுதடைந்தாலும் இதைக் கேட்க முடியாத தர்ம சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது என பொதுமக்கள் கூறுகின்றனர்.
இச்சாலை வழியாக நாள் ஒன்றுக்கு சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பயணிக்கின்றனர். பள்ளி கல்லூரிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி இந்த சாலையை தரமான சாலைகயாக அமைத்து தர வேண்டி இப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
- காட்பாடி தாலுகா செய்தியாளர் கே எஸ் அருண்
No comments:
Post a Comment