விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது - மாவட்ட ஆட்சியர் தகவல். - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 21 September 2023

விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது - மாவட்ட ஆட்சியர் தகவல்.


வேலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. இதில், வேளாண்மை, தோட்டக்கலை, பட்டுவளர்ச்சி, கூட்டுறவு, வனத்துறை, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், மின்சாரம், பால்வளம் உள்பட பல்வேறு அரசுத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயி கள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தெரிவிக்கும் கோரிக்கை, குறைகளுக்கு பதில் அளிக்க உள்ளனர்.

மேலும் கடந்த மாதம் குறைதீர்வு கூட் டத்தில் விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் தெரிவிக்க உள்ளனர். எனவே வேலூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் இந்த கூட்டத் தில் கலந்து கொண்டு தனிநபர் பிரச்சினைகளை மனுவாகவும், பொதுப்பிரச்சினைகளை கோரிக்கையாகவும் தெரிவிக்கலாம். இந்த தகவலை வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்துள்ளார்.


- வேலூர் தாலுகா செய்தியாளர் மு.இன்பராஜ்

No comments:

Post a Comment

Post Top Ad