வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் தாலுகா, தமிழ்நாடு முதலமைச்சரின் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தினை காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடங்கி வைக்கப்பட்டது அதனை அடுத்த வேலூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தினை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் வேலூர் மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன் ஆகியோர் கலந்துகொண்டு கே.வி.குப்பம் கீழ்வைத்னாங்குப்பம் பேருந்து நிலையத்தில் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்கள்.
இந்நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் டி எம் கதிர் ஆனந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏபிநந்தகுமார், வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமுலுவிஜயன், மாவட்ட ஊராட்சி குழு பெருந்தலைவர் அணைக்கட்டு மு.பாபு, காட்பாடி வேல்முருகன் வேலூர் மாநகராட்சி ஆணையாளர் இரத்தினசாமி ஐஏஎஸ், மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார், மாநகராட்சி துணை மேயர் சுனில் குமார், மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், மகளிர் உரிமை தொகைக்காண பயனாளிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்

No comments:
Post a Comment