வேலூர் மாவட்டம் குடியாத்தம் சீவூர் ஊராட்சியில் புறவழிச்சாலைக்கு தேசிய நெடுஞ்சாலை துறை விவசாய நிலங்களுக்கு உரிய இழப்பீட்டு தொகையை வழங்காமல் விவசாயம் நிலங்களை அத்துமீறி கையகப்படுத்தும் வேலையை துவங்கி உள்ள நிலையில் விவசாயிகள் மற்றும் நிலத்தின் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இன்று அது சம்பந்தமாக நெடுஞ்சாலைத் துறை மாவட்ட வருவாய் அலுவலர், தாசில்தார் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கும் வரை எந்த ஒரு பணிகளையும் செய்யக்கூடாது என்று விவசாயிகள் அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர். உரிய இழப்பீடு தொகை கிடைக்கும் வரை மேற்கொண்டு எந்த பணிகளும் செய்ய மாட்டோம் என்று அதிகாரிகள் விவசாயிகளிடம் வாக்குறுதி அளித்தனர்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

No comments:
Post a Comment