சென்னை கலைவானர் அரங்கில் நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி விருதுகள் வழங்கி பாராட்டினார். விருதினை பெற்ற ஆசிரியர் குணசேகரன் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் எ.பி.நந்தகுமார், அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் பெ.மணிமொழி, மாவட்டக்கல்வி அலுவலர் மு.அங்குலட்சுமி, பாராட்டுகளை தெரிவித்தனர். இன்று 07.09.2023 காலை பள்ளியில் அவருக்கு உற்சாக வரவேற்பும் பாராட்டும் அளிக்கப்பட்டது பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில் பள்ளி தலைமையாசிரியை ஜெயசீலி கிறிஸ்டி தலைமை தாங்கினார்.
உதவி தலைமையாசிரியை லதா, ஆனந்தன்,ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஜுனியர் ரெட்கிராஸ் மாவட்ட அமைப்பாளர் செ.நா.ஜனார்த்தனன், இணை அமைப்பாளர் எஸ்.ரகுபதி, இலத்தேரி ஆண்கள் மேல்நிலை தலைமையாசிரியர் கார்த்திகேயன், கல்வி உலகம் பள்ளி தலைமையாசிரியர்கள் எஸ்.எஸ்.சிவவடிவு, சிவரஜ்குமார், ஆகியோர் சால்வை அணிவித்தனர்.
பள்ளியின் ஜுனியர் ரெட்கிராஸ், பாரத சாரணிய மாணவிகள் பூங்கொத்துகளை அளித்தும் கை தட்டியும் உற்சாக வரவேற்பு அளித்தனர். பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் முருகேசன், ஜெயாமுருகேசன், துணைத்தலைவர் எல்.கே.விநாயகம், முன்னாள் துணைத்தலைவர் கே.ருத்திரன், பொருளாளர் சரவணன், பிரபு, ஆண்கள் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கே.எ.குப்பன், துணைத்தலைவர் முருகேசன், அறங்காலர் குழு உறுப்பினர் மற்றும் அரும்பாக்கம் ஊராட்சி மன்ற கவுன்சிலர் அமலுமகேந்திரன், உள்ளிட்டோர் பாராட்டினர்.
மேலும் இலத்தேரி ஊராட்சி மன்ற தலைவர் மோகன் துணைத்தலைவர் செல்வகுமார் அரும்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் சிவக்குமார், அன்னங்குடி ஊராட்சி மன்ற தலைவர் கார்த்தி ஓய்வுபெற்ற ஆசிரியை சுலோசனா, மனோகரி, சேகர், லதா, ஓய்வுபெற்ற தலைமைக்காவலர் ஆர்.சண்ணன், வசந்தா, கருணாமூர்த்தி, உஷாராணி,
பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் கே.சத்தியபிரியா, துணைத்தலைவர் ராஜலட்சுமி, மஞ்சு, மருத்துவ பயிற்சியாளர் நிதிஷ், சந்தனபிரியா இடைநிலை ஆசிரியர் சங்க பொதுச்செயலாளர் அ.சங்கர் துணைத்தலைவர் பெ.இளங்கோ, தொழிற்கல்வி ஆசிரியர் ச.சச்சிதானந்தம், ஜி.டி.பாபு, ஜி.சீனிவாசன், காட்பாடி ரெட்கிராஸ் அவை துணைத்தலைவர் ஆர்.சீனிவாசன், பொருளாளர் வி.பழனி முன்னாள் பள்ளி தலைமையாசிரியர்கள் எ.நடராஜன், எஸ்.ஜெயலட்சுமி, தென்றல் முன்னாள் மாணவர் சங்க தலைவர் திருநாவுக்கரசு, ரியல் ஹரோஸ் அமைப்பின் தலைவர் மற்றும் முன்னாள் ராணுவ வீரர் அருள் நம்பி மற்றும் குழுவினர் முன்னாள் மாணவ மாணவிகள் கலைஞானம், எல்.எம்.பாபு, எல்.பி.பாபு, கோபி, மற்றும் பள்ளி ஆசிரியர்கள், நண்பர்கள், உறவினர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் பாராட்டினர்.
- வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்


No comments:
Post a Comment