வேலூரை அடுத்த புதுவசூரை சேர்ந்தவர் பிரபல ரவுடி வசூர்ராஜா. இவர் மீது வேலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தலைமறைவாக இருந்த அவரை போலீசார் கைது செய்து கோவை சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் உள்ள குற்ற வழக்கு தொடர்பாக நேற்று மாலை அவர் பலத்த காவலுடன் வேலூருக்கு அழைத்து வரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
வழக்கு 19-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் மீண்டும் அவரை கோவை சிறைக்கு போலீசார் அழைத்துச் சென்றனர்.
- வேலூர் மாவட்ட தாலுகா செய்தியாளர் மு.இன்பராஜ்
No comments:
Post a Comment