குடியாத்தம் டாக்டர். கிருஷ்ணசுவாமி பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது. பள்ளி தாளாளர் டாக்டர் கிருஷ்ணசுவாமி தலைமையில், நிர்வாக அலுவலர் மலர்விழி, பள்ளி முதல்வர் எம்.ஆர்.மணி ஆகியோர் முன்னிலையில் எல்.கே.ஜி. மற்றும் யு.கே.ஜி. வகுப்பு மாணவ, மாணவிகள் ராதா மற்றும் கிருஷ்ணர் உடை அணிந்து அழகாக தோற்றமளித்து வந்தனர். பூஜை செய்து முடிவில் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியைகள் ரேவதி, கவிதா, ஆனந்தி, மகாலட்சுமி மற்றும் பலர் செய்தனர். இறுதியில் ஆசிரியை வரலட்சுமி நன்றி கூறினார்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
No comments:
Post a Comment