வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசு தலைமை மருத்துவமனையில் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் குமரவேல் பாண்டியன் அவர்கள் காலை 8- மணியளவில் திடிர் ஆய்வு செய்தார். நோயாளிகளிடம் அந்தந்த வார்டில் சென்று சிகிச்சையின் தன்மையை கேட்டு அறிந்தார். புதியதாக கட்டப்பட்டு இருக்கும் மருத்துவமனை கட்டிடங்களை பார்வையிட்டார்.
உடன் வருவாய் கோட்டாட்சியர் வெங்கட்ராமன் நகர மன்ற தலைவர் எஸ். சௌந்தர்ராஜன் வட்டாட்சியர் விஜயகுமார் தலைமை மருத்துவர் பியூலா ஆகியோர் உடன் இருந்தனர்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

No comments:
Post a Comment