காட்பாடி அருகே ஆந்திராவிற்கு கடத்த முயன்ற ரேசன் அரிசி பறிமுதல். - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 14 September 2023

காட்பாடி அருகே ஆந்திராவிற்கு கடத்த முயன்ற ரேசன் அரிசி பறிமுதல்.


வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் உத்தரவுப்படி வேலூர் மாவட்ட பறக்கும்படை தாசில்தார் விநாயகமூர்த்தி தலைமையில் காட்பாடி தாலுகா பொன்னை அடுத்த தெங்கால் (பார்டர்) கோயில் அருகில் பஸ் நிறுத்தத்தில் ஆந்திர மாநிலத்திற்கு கடத்த இருந்த 23மூட்டை 710 கிலோ ரேசன் அரிசியை உதவியாளர் திவாகர், அரசு ஜீப் வாகன டிரைவர் உதவியுடன் பறிமுதல் செய்யப்பட்டது. 

பறிமுதல் செய்த ரேஷன் அரிசியை  திருவலம் நுகர்பொருள் உணவு கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது. பொன்னை அடுத்த கீரை சாத்து பஸ் நிறுத்தத்தில் 700 கிலோ ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


- வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்

No comments:

Post a Comment

Post Top Ad