வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, வள்ளிமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் திருத்தள நிரந்தர உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை எண்ணப்பட்டது.
ரத்தினகிரி பாலமுருகன் திருக்கோயில் செயல் அலுவலர் வே.சங்கர், குடியாத்தம் ஆய்வாளர் சு.பாரி, வள்ளிமலை திருக்கோயில் செயல் அலுவலர் தே.திருநாவுக்கரசு ஆகியோர் முன்னிலையில் உண்டியல் வருமானம் எண்ணப்பட்டதில் ரூ.12 லட்சத்து 37 ஆயிரத்து 644 ரொக்கமாகவும், 129 - கிராம் தங்கம், வெள்ளி 300 கிராம், வருவாய் வந்துள்ளது. என குறிப்பிடத்தக்கது. எண்ணிக்கையின்போது எழுத்தர் ராஜ்குமார் மற்றும் கோயில் பணியாளர்கள் உடன் இருந்தனர்.
- வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்

No comments:
Post a Comment