அகில இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பினர் பாராளுமன்றம் நோக்கி பேரணி வேலூர் மாவட்ட ஆசிரியர்கள் பங்கேற்பு. - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 8 September 2023

அகில இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பினர் பாராளுமன்றம் நோக்கி பேரணி வேலூர் மாவட்ட ஆசிரியர்கள் பங்கேற்பு.


இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் வேலூர் மாவட்ட நிர்வாக குழு கூட்டம் இன்று வேலூர் ஆசிரியர் இல்லத்தில் நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளரும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலாளர் ஆ.சீனிவாசன் தலைமை தாங்கினார்.

தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்ட தலைவர் எஸ்.ராஜேஷ் கண்ணா முன்னிலை வகித்தார். தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில சட்ட செயலாளர் ஜெ.காந்தி தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாவட்ட தலைவர் கே குணசேகரன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் அகில இந்திய செயற்குழு உறுப்பினரும் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தின் மாநில தலைவருமான செ.நா.ஜனார்த்தனன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்புரையாற்றினார் .

அப்போது அவர் கூறியதாவது புதிய பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தையும் புதிய கல்விக் கொள்கை 2020 ஆகிய இரண்டையும் ரத்து செய்யக் கோரியும் ஒன்றிய அரசில் காலியாக இருக்கக்கூடிய ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப கோரியும், தொகுப்பூதியம் மதிப்பூதியம் ஒப்பந்த ஊதியம் உள்ளிட்ட அனைத்து வகையான அத்துகூலி முறைகளை ரத்து செய்து அனைவருக்கும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் .உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பர் 13ஆம் தேதி புதுடெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரிலிருந்து பேரணியாக புறப்பட்டு பாராளுமன்றம் நோக்கி செல்ல திட்டமிட்டுள்ளனர். அதன் அடிப்படையில் இன்று வேலூர் மாவட்டத்தில் இருந்து இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் சார்பில் 15 ஆசிரியர்கள் பேரணியில் பங்கேற்க செல்ல உள்ளனர் அவர்களை வாழ்த்தி வழி அனுப்பும் நிகழ்ச்சி வேலூர் ஆசிரியர் இல்லத்தில் நடைபெற்றது. மேலும் இந்த நிகழ்வில் தமிழ்நாடு அரசின் மாநில நல்லாசிரியர் விருது என்னும் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்றுள்ள லத்தேரி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியின் இடைநிலை ஆசிரியர் க. குணசேகரன் அவர்களுக்கு பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.

ஒன்றிய அரசு புதிய கல்விக் கொள்கை மற்றும் புதிய ஓய்வூதிய திட்டம் ஆகியவற்றை ரத்து செய்யும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றார். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வேலூர் கல்வி மாவட்ட தலைவர் க.காசி செயலாளர் ச.சங்கர் துணைச் செயலாளர் ச.விவேகானந்தன், மாநில துணைத்தலைவர் ரஞ்சன் தயாள தாஸ் ஆகியோர் ஏற்புரை நிகழ்த்தினார், முடிவில் ரகுராமன் நன்றி கூறினார்.

- வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்

No comments:

Post a Comment

Post Top Ad