நாட்டைக்காப்போம் அமைப்பின் சார்பில் அக்டோபர் 2, காந்தி ஜெயந்தி அன்று தமிழகத்தின் 6 முனைகளில் இருந்து இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாப்பதற்காக விழிப்புணர்வு மற்றும் பரப்புரை கலைப்பயணத்தை நாங்கள் மேற்க்கொள்ள இருக்கிறோம். இதில் சென்னை, வேலூர் நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி, உதகை, கன்னியாகுமரி ஆகிய இடங்களில் இருந்து அக்டோபர் 2ஆம் தேதி கிளம்பி அக்டோபர் 17 உலக வறுமை ஒழிப்பு தினத்தன்று மதுரையில் மாபெரும் மாநாட்டுடன் நிறைவு செய்ய இருக்கிறோம். சிவில் சமூக அமைப்புகள் பொதுநல நோக்குடன் நடத்தப்படும்.
இம்மாநாட்டிற்கு இந்திய அளவிலும் தமிழக அளவிலும் ஜனநாயகம் காக்கும் அரசியல் தலைவர்களும் சிவில் சமூக தலைவர்களும் பங்கேற்கின்றனர். காலை 1மணிக்கு சேப்பாக்கம் சென்னையில் அக்டோபர் 2அன்று காலை ஸ்டேடியம் முன்பு துவங்கும் கலை பயணத்தை துவங்கி வைக்கும் நிகழ்விலும் தமிழகத்தின் மற்ற பகுதிகளில் நடக்கும் கலைப் பயணத்தின் முக்கிய நிகழ்வுகளிலும், அக்டோபர் 17 அன்று மதுரை மாநாட்டிலும் நீங்களும் உங்கள் அமைப்பைச் சார்ந்தவர்களும் கலந்துகொள்ள தோழமையோடு அழைக்கிறோம். என தெரிவிக்கப்பட்டது
இதில் வேலூர் மண்டலவரவேற்பாளர் ஐசக் கதீர்வேல்,தலைமை விசிக வேலூர் மாவட்ட செயலாளர் வேலூர் பிலிப் மற்றும் நாட்டை காப்போம் மண்டல பொருப்பாளர்கள். ஏசுபாதம். செந்தமிழ்செல்வி. வழக்கறிஞர் பாஸ்கர். வழக்கறிஞர் கென்னடி. விசிக பாஸ்கரன் மற்றும் 100 க்கும் மேற்பட்ட பல அமைப்பு சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- வேலூர் தாலுகா செய்தியாளர் மு.இன்பராஜ்

No comments:
Post a Comment