இந்த பயிற்சிக்கூட்டத்திற்கு மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) அங்குலட்சுமி அவர்கள் தலைமை தாங்கினார். மெல்ல கற்கும் மாணவர்களின் கற்றல் அடைவை அதிகரிக்கும் நோக்கம் குறித்து அவர் பேசினார். கூட்டத்தில் கருத்தாளர்களாக சலவன்பேட்டை, மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி ஆங்கில ஆசிரியர் திருமதி.கலைவாணி கற்பித்தலில் கையாள வேண்டிய எளிய முறைகளை விளக்கி கூறினார். ஆசிரியர் பயிற்றுனர்கள் திரு.ஜோதிபாஸ், திரு.கன்னியப்பன் ஆகியோர் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவிதிட்ட அலுவலர் எம்.மகாலிங்கம், மாவட்ட பசுமை திட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.அதிசயநாதன் பள்ளி த்துணை ஆய்வாளர் ஆ.மணிவாசகம், எ.சைனிமோல், மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கே.எம்.ஜோதீஸ்வரபிள்ளை, எ.ஜெயதேவரெட்டி, லதா, கோ.சரளா, கே.பேபி, சரஸ்வதி, தாமோதரன், அ.சிவக்குமார், உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கோ.பழனி, எஸ்.சிவ்வடிவு, கேசவன், சுரேஷ் ஜுனியர் ரெட்கிராஸ் மாவட்ட அமைப்பாளர் செ.நா.ஜனார்த்தனன் உள்பட மாவட்டத்தில் உள்ள 158 பள்ளி தலைமையாசிரியர்கள் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
- காட்பாடி தாலுகா செய்தியாளர் கே எஸ் அருண்

No comments:
Post a Comment