வேலூர் மாவட்டத்தில் இன்று (04.09.2023) வேளாண்மைப் பொறியியல் துறையின் சார்பில் வேளாண் இயந்திரங்களை விவசாயிகளுக்கு வழங்கி தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, வேலூர் மாவட்டத்தில் 72 விவசா யிகளுக்கு ரூ.141 இலட்சம் மதிப்பில் பவர் டில்லர் மற்றும் களையெடுப்பான் கருவிகளை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.குமாரவேல் பாண்டியன், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் து.மு.கதிர் ஆனந்த், அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார், வேலூர் சட்டமன்ற உறுப்பினர் ப.கார்த்திகேயன், மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு, துணை மேயர் சுனில் குமார் அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
- வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்

No comments:
Post a Comment