வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதிகளில் உள்ள சில ஓட்டல்கள் மற்றும் கடைகளில் விற்கப்படும் உணவுகள், குளிர்பானங்கள் தரமற்றதாக உள்ளதாக மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் அவர்களுக்கு புகார்கள் சென்றது. அவரது உத்தரவின் பேரில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் செந்தில்குமார் தலைமையில் ஒரு குழுவினர் காட்பாடியிலும், உணவு பாதுகாப்பு அலுவலர் ராஜேஷ் தலைமையில் மற்றொரு குழுவினர் பாகாயம், அடுக்கம்பாறை பகுதிகளிலும் திடீர் சோதனை செய்தனர்.
அப்போது ஓட்டல்களில் விற்பனை செய்யப்படும் உணவுகள் தரமானதாக உள்ளதா என ஆய்வு செய்யப்பட்டது. மேலும் குளிர்பானங்கள், இதர உணவு பொருட்கள் காலாவதி ஆகிவிட்டதா என்றும் ஆய்வு செய்தனர். சில கடைகளில் மேலும் 2 கடைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
ஒரு கடைக்கு ரூ. 2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த திடீர் ஆய்வுகள் அவ்வப்போது மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- காட்பாடி தாலுகா செய்தியாளர் கே எஸ் அருண்

No comments:
Post a Comment