வேலூர் ரயில்வே மேம்பாலத்தில் லாரி விபத்து! - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 8 September 2023

வேலூர் ரயில்வே மேம்பாலத்தில் லாரி விபத்து!


வேலூர் மாவட்டம் ரயில்வே மேம்பாலத்தில் லாரி விபத்து பீகார் மாநிலம், கான்புராவை சேர்ந்தவர் மோதிலால் குமார் (வயது 35). இவர் லாரி கிளினியராக வேலை  செய்து வந்தார். சென்னையில் இருந்து லாரியில் கம்ப்யூட்டர் உதிரி பாகங்களை ஏற்றிக் கொண்டு பீகாரை சேர்ந்த டிரைவர் ஒருவர் லாரியை பெங்களூருக்கு ஓட்டி வந்தார்.

இந்த லாரியில் மோதிலால் குமார் கிளீனராக இருந்தார். அப்பொழுது சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சேண்பாக்கம் ரெயில்வே மேம்பாலத்தில் லாரி சென்று கொண்டு இருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக முன்னாள் சென்ற கன்டெய்னர் லாரியின் பின்புறத்தில் லாரி மோதியது. 

இந்த விபத்தில் கிளீனியர் மோதிலால் குமார் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடினார். இதுகுறித்து தகவல் அறிந்த வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் இருந்த மோதிலால் குமார் பிணத்தை மீட்டு பரிசோத னைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

லாரியை பறிமுதல் செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

- வேலூர்  மாவட்ட தலைமை செய்தியாளர் மு. பாக்யராஜ் 

No comments:

Post a Comment

Post Top Ad