குடியாத்தம் போக்குவரத்து காவல்துறையின் புதிய முயற்சியாக வாகன விபத்துக்களை தவிர்க்கும் பொருட்டு கல்வி நிலையங்களுக்குச் சென்று மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு, போக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி ஓட்டுநர் உரிமம் வழங்கப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக ராஜகோபால் பாலிடெக்னிக் கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் 80-மாணவர்களுக்கு சாலை விபத்து தொடர்பான விழிப்புணர்வு முகாம் நடத்தி, அவர்களுக்கு வாகனம் ஓட்டுவது தொடர்பாக அடிப்படை பயிற்சி அளித்து, ஓட்டுநர் உரிமம் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.
பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் தண்டபாணி தலைமை வகித்தார். டிஎஸ்பி கே.ராமமூர்த்தி, போக்குவரத்துப் பிரிவு காவல் ஆய்வாளர் முகேஷ்குமார் ஆகியோர் மாணவர்களுக்கு ஓட்டுநர் உரிமங்களை வழங்கினர். போக்குவரத்துப் பிரிவு உதவி ஆய்வாளர் நவீன் யுவராஜ் நன்றி கூறினார்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
No comments:
Post a Comment