வேலூர் மாவட்டம் குடியாத்தம் தமிழ்நாடு விசைத்தறி கைத்தறி மற்றும் அனைத்து அமைப்புசாரா தொழிலாங நலச் சங்கத்தில் அவசர செயற்குழு கூட்டம் திங்கட்கிழமை காலை 10 மணி அளவில் சங்க செயலாளர் சசிகுமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது .
சங்க பொருளாளர் ரவீந்திரன் சங்கத் துணைத் தலைவர் ஆறுமுகம் துணைச் செயலாளர் சம்பத் மற்றும் துக்காராம் செயற்குழு உறுப்பினர்கள் பழனி பிரபுராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர் சங்கத் தலைவர் ஆர் அண்ணாமலை அவர்கள் தற்போதைய விசைத்தறி தொழில் சூழ்நிலை குறித்தும் சங்கத்தின் செயல்பாடுகள் குறித்தும் விரிவாக பேசினார் கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் செயற்குழு உறுப்பினர்களால் கொண்டுவரப்பட்டு வருமானதாக தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம் 1.
சேலை உற்பத்தியாளர்கள் தொடர்ந்து கூலிக் குறைப்பு செய்து வரும் செயலை கண்டிப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம் 2.
பாலியஸ்டர் சேலை ஒன்றுக்கு ரூபாய் 320 வழங்கி வந்தனர் ஆனால் சேலை உற்பத்தியாளர்கள் சேலை ஒன்றுக்கு ரூபாய் 55 குறைத்து கடந்த ஓராண்டாக வழங்கி வருகின்றனர் நாம் குறைக்கப்பட்ட கூலியை உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் மேலும் தற்போது உயர்ந்துள்ள விசைத்தறி உதிரி பாகங்களின் கடுமையான விளைவு கடுமையான விலைவாசி உயர்வு மின் கட்டண உயர்வு என்று பல முனை தாக்குதலினால் விசைத்தறி நெசவாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் எனவே பழைய கூலி சேலை ஒன்றுக்கு ரூபாய் 320 உடன் சேர்த்து தற்போதைய விலைவாசி உயர்வுக்கு ஏற்ப சேலை ஒண்ணுக்கு ரூபாய் 420 வழங்க வேண்டும் என்று சேலை உற்பத்தியாளர்களை தீர்மானத்தின் மூலம் கேட்டுக்கொள்கிறோம்.
தீர்மானம் 3.
மேற்கண்ட தீர்மானங்களை வலியுறுத்தி வருகின்ற 13/9/2023 புதன்கிழமை ஒரு நாள் முழுவதும் அடையாள வேலை நிறுத்தம் செய்வது என்று ஒருமானதாக தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம் 4.
காளியம்மன் கோவில் அருகில் இருந்து காலை 8 மணிக்கு ஊர்வலம் தொடங்கி குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகம் சென்று வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் செய்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம் 5.
தமிழக அரசு விசைத்தறி நெசவாளர்களின் தற்போதைய சூழ்நிலையை கருதி அரசு அதிகாரிகள் சேலை உற்பத்தியாளர்கள் விசைத்தறி தொழிலாளர் சங்கம் நிர்வாகிகள் கொண்ட முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு உடனே ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது.
எனவே விசைத்தறி தொழிலாளர்கள் விசைத்தறி உரிமையாளர்கள் பீம் போடுபவர்கள் அச்சு புனைப்பவர்கள் கயிறு கட்டுபவர்கள் அணி போடுபவர்கள் மற்றும் தொழில் சார்ந்த அனைத்து தொழிலாளர்களும் போராட்டத்திற்கு ஆதரவு தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
முடிவில் சங்க செயற்குழு உறுப்பினர் பிரபுராஜ் அவர்கள் அனைவருக்கும் நன்றி கூறினார்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

No comments:
Post a Comment