குடியாத்தம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 8 September 2023

குடியாத்தம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல்


வேலூர் மாவட்டம் குடியாத்தம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல்.போக்குவரத்து பாதிப்பு மறியலில் ஈடுபட்டவர்களை போலீஸார் கைது செய்தனர்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில செயற்குழு உறுப்பினர் சங்கரி தலைமை தாங்கினார் .இதில் விலைவாசி குறைத்திட வேண்டும்,வேலை வாய்ப்பை உருவாக்கிட வேண்டும்,விவசாயிகள் விளைவித்த பொருட்களுக்கு கட்டுபடியான விலை வழங்க வேண்டும்,100 நாள் வேலையை பாதுகாத்திட வேண்டும்,உணவு,எண்ணெய் விலை உயர்வை குறைத்திட வேண்டும்,நாட்டின் பொதுத் துறைகளை பாதுகாத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பழைய பேருந்து நிலையத்திலிருந்து கோஷங்களை எழுப்பியவாறு ஊர்வலமாக சென்றனர்.

பின்னர் புதிய பேருந்து நிலையம் அருகில் சாலை மறியலில் ஈடுபட்டனர் இதில் மாவட்ட குழு உறுப்பினர்கள் சாமிநாதன்,காத்தவராயன்,குணசேகரன் தாலுக்கா செயலாளர் சிலம்பரசன்,உள்ளிட்ட கட்சியினர் மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். இதனைத் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்களை போலீஸார் கைது செய்தனர் இதனால் புதிய பேருந்து நிலையம் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு அப்பகுதியில் சற்று பரபரப்பு காணப்பட்டது.

- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad