வேலுாா் மாவட்டம் குடியாத்தம் அடுத்த தட்டபாறை கிராமததில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா இன்று நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் எஸ். ஜோதி பாஸ்கரன் அவர்கள் தலைமை தாங்கினார். முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு துணை சிஏ.ஏகாம்பரம் தலைவர் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஏ சாமிநாதன் ஒன்றிய குழு உறுப்பினர் கே. சரவணன் சின்னாளப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் என் பாபு பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் வசந்தி ரமேஷ் ஐயப்பன் வெங்கடேஷ் எஸ் சுரேஷ் குமார் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.
பள்ளியின் பட்டதாரி ஆசிரியர் டி.சிவராஜ் வரவேற்ப்புரை ஆற்றினார், இதில் சிறப்பு அழைப்பாளராக வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் டிஎம்.கதிர் ஆனந்த், குடியாத்த சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜியன் ஆகியோர் விலையில்லா மிதி வண்டிகளை வழங்கினார்கள். உடன் ஒன்றிய குழு பெருந்தலைவர் என்இ.சத்தியாநந்தம் அரசு மருத்துவமனை ஆலோசனை குழு உறுப்பினர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கள்ளுா் கே. ரவி ஒன்றிய குழு துணை தலைவர் கே கேவி.அருண் வட்டார வளர்ச்சி அலுவலர் கார்த்திகேயன் வட்டார வளர்ச்சி அலுவலர் திருமலை கிராம நிர்வாக அலுவலர் குமார் பெற்றோர் ஆசிரியர் கழக கௌரவ தலைவர் துரைராஜ் பெற்றோர் ஆசிரியர் கழக மேலாண்மை உறுப்பினர்கள் எஸ். குமாரி லதா ஆகியோர் பங்கேற்றனர்
56 மாணவ மாணவியருக்கு விலை இல்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.
இறுதியில் உதவி தலைமை ஆசிரியர் எஸ். சாந்தி நன்றி கூறினார்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
No comments:
Post a Comment