வேலூர் மாவட்டம் காட்பாடி காந்திநகர் பகுதியில் உள்ள தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (CITU) சார்பில் ஸ்மார்ட் மீட்டர் புகுத்துவதை ரத்து செய்ய வேண்டும், ஈ டெண்டர் முறையில் அவுட்சோர்ஸிங் விடுவதை ரத்து செய்ய வேண்டும், காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும், உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி (COTEE ) மாநிலத் துணைத் தலைவர் எஸ். ஜோதி அவர்களின் தலைமையில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.
இந்த தர்ணா போராட்டத்தில் வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி விளக்கிப் பேசினார்.
வேலூர் தாலுகா செய்தியாளர்
மு.இன்பராஜ்
No comments:
Post a Comment