விளையாட்டுப் போட்டிகளில்வெற்றி பெற்ற மாணவ மாணவிகள் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ள தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர்.
14 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கான தனி நபர் வளைபந்து போட்டியில் 9 ஆம் வகுப்பு மாணவர் சச்சின் முதலாவதும், அதே பிரிவில் இருவர் விளையாடும் வளைபந்து போட்டியில் 8ஆம் வகுப்பு சுஜன் மற்றும் 9ஆம் வகுப்பு சச்சின் ஆகியோர் முதலாவதாகவும், 14 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான எறிபந்து மற்றும் 17 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான எறிபந்து ஆகியவற்றில் 12 பேர் கொண்ட இரு குழுக்கள் முதலாவதாகவும், 100 மீ, 600 மீ மாணவிகளுக்கான ஓட்டப்பந்தயத்தில் முறையே 7ஆம் வகுப்பு வர்ஷா, 8ஆம் வகுப்பு கீர்த்தனா ஆகியோர் இரண்டாவதாகவும், இளையோருக்கான செஸ் போட்டியில் 7ஆம் வகுப்பு நவீன் 2ஆவதாகவும், வட்டு எறியும் போட்டியில் 8 ஆம் வகுப்பு சுஜன் 2ஆவதாகவும் வெற்றி பெற்று சாதனை படைத்தனர்.
இவர்கள் அனைவரும் காட்பாடி வி.ஐ.டி.யில் நடைபெற உள்ள மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளனர். இவர்களையும், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர் சசிகுமார் ஆகியோரையும் பள்ளி தாளாளர் டாக்டர் கிருஷ்ணசுவாமி, நிர்வாக அலுவலர் மலர்விழி, பள்ளி முதல்வர் எம்.ஆர்.மணி மற்றும் ஆசிரியைகள் பாராட்டினர்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

No comments:
Post a Comment