குடியாத்தத்தில் பரபரப்பு 10-அரசு பேருந்துகள் ஜப்தி. - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 12 October 2023

குடியாத்தத்தில் பரபரப்பு 10-அரசு பேருந்துகள் ஜப்தி.


வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த காக்கா தோப்பு பகுதியில் வசிக்கும் தீபன் (வயது 30) இவர் ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்தில் காவலராக பணி செய்து வந்தார். கடந்த(9.11.2015) அன்று இரவு பணியை முடித்துவிட்டு கீழ்ப்பட்டி வழியாக வரும்போது கீழ்பட்டி சர்ச் எதிரில் அரசு பேருந்து மோதி சம்பவ இடத்திலே பலியானார். இது குறித்து அவரது மனைவி செல்வியம்மாள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த கனம் சார்பு நீதிபதி  ஜி.பிரபாகரன் அவர்கள் விபத்தில் மரணம் அடைந்த காவலர் தீபன் என்பவரின் மனைவிக்கு  ₹81-லட்சம் இழுப்பீடு வழங்க கடந்த  (19.8.2020)தீர்ப்பு வழங்கினார். இழப்பீடு தொகையை வழங்காத காரணத்தால் இன்று பழைய பேருந்து நிலையத்தில் 10- அரசு பேருந்துகளை ஜப்தி செய்ய சார்பு நீதிமன்ற முதுநிலை கட்டளை நிறைவேற்றினார்கள்.


பிரேமலதா துரைராஜ் அவர்கள் அரசு பேருந்துகளை ஜப்தி செய்தனர். வழக்கறிஞர்கள் செழியன் சதீஷ் ஆகியோர்‌ உடன் இருந்தனா் இதனால் பஸ் நிலையத்தில் சற்று பரபரப்பு‌ ஏற்பட்டது10 பேருந்து ஜப்தி செய்ய உத்தரவின் பேரில் தற்போது இரண்டு பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது.


- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad