வேலூர் மாவட்டம் குடியாத்தம் பேர்ணாம்பட் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தீப்பெட்டி மற்றும் பட்டாசு தொழிற்சாலைகளில் ஏற்படும் தீ விபத்துகளை தவிர்ப்பது மற்றும் விபத்துயில்லா பட்டாசு உற்பத்தி குறித்து மற்றும் பட்டாசு தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு பயிற்சி முகாம் மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன் அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்றது.
இப்பயிற்சி முகாமில் நகர மன்ற தலைவர் எஸ் சௌந்தரராஜன் தொழிலாக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை எம் சபீனா தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர்கள் சாந்தினி பிரபா உமா பாரதி தீப்பெட்டி தொழிற்சங்க தலைவர் ரவி குடியாத்தம் வட்டாட்சியர் சித்ராதேவி நகராட்சி ஆணையாளர் மங்கையர்கரசன் கிழக்கு வருவாய் ஆய்வாளர் பலராமன் பாஸ்கர் நகர கிராம நிர்வாக அலுவலர் சபரிமலை நெல்லூர் பேட்டை கிராம நிர்வாக அலுவலர் சத்யவதி மற்றும் பல அரசு ஊழியர்கள் மற்றும் பட்டாசு கடை உரிமையாளர்கள் தீப்பெட்டி தொழிற்சாலை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
No comments:
Post a Comment