வேலூர் மாவட்டம் குடியாத்தம் டவுன் டாக்டர் கிருஷ்ணசுவாமி மெட்ரிக் பள்ளியில் தமிழ்நாடு அரசு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை குடியாத்தம் அலுவலகம் சார்பில் நிலைய அலுவலர் எஸ். அரசு தலைமையில் மற்ற பணியாளர்கள், காகிதம், கட்டை போன்ற எரிந்து சாம்பலாகும் பொருட்கள், பெட்ரோல், டீசல் முதலிய எண்ணெய் வகை பொருட்கள், சமையல் எரிவாயு போன்ற வாயு வகை பொருட்கள், மின்சாதனப் பொருட்கள் ஆகியவற்றில் ஏற்படும் தீவிபத்து, அவற்றை தடுப்பது மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளை செய்முறை விளக்கங்களுடன் செய்து காட்டி மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மேலும் தகவல் அறியும் உரிமைச்சட்டம் பற்றியும் தெளிவாக எடுத்துரைத்தனர். இறுதியில் மாணவ, மாணவிகளின் சந்தேகங்களுக்கு விடையளிக்கப்பட்டு, வினாடி, வினா நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளி நிர்வாக அலுவலர் கே.மலர்விழி, பள்ளி முதல்வர் எம்.ஆர்.மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆசிரியர்கள் சசிகுமார், ஆனந்தி, வாசுகி, ரேவதி ஆகியோர் செய்தனர். முடிவில் ஆசிரியை அகிலா நன்றி கூறினார்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
No comments:
Post a Comment