இந்நிகழ்ச்சியில் முதியோர் இல்லம் பாதுகாத்தல் போதைப்பொருள் ஒழிப்பு குறித்து மாரத்தான் ஓட்ட பந்தயம் வேலூர் மாவட்டம் இராணிப்பேட்டை மாவட்டம் திருப்பத்தூர் மாவட்டம் ஆகிய மாவட்டங்களில் இருந்து இளைஞர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்ட மாரத்தான் ஓட்ட பந்தயம் சிறப்பு அழைப்பாளராக விஐடி கல்லூரி துணைத் தலைவர் டாக்டர் ஜிவி செல்வம் டாக்டர் பரணிதரன் ரோட்டரி கிளப் ஆளுநர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் ரோட்டரி கிளப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
முதல் நிகழ்ச்சியாக டாக்டர் பரணிதரன் ரோட்டரி சங்க ஆளுநர் கொடியசைத்து மாரத்தான் ஓட்ட பந்தயத்தை தொடங்கி வைத்தனர் வேலூர் நேதாஜி விளையாட்டு அரங்கத்தில் தொடங்கி சங்கர பாளையம் வழியாக பாகாயம் சுற்றி திரும்பவும் நேதாஜி ஸ்டேடியம் வரை 10 கிலோ மீட்டர் தொடர் ஓட்ட பந்தயத்தை கலந்து கொண்ட மாணவர்கள் 250க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டு ஐந்து கிலோ மீட்டர் தொடர் ஓட்டப்பந்தத்தையும் மாற்றுத்திறனாளிகளுக்கான ஓட்டப்பந்தயமும் நடைபெற்றது.
முதல் பரிசு பத்தாயிரத்தி ஒன்று இரண்டாம் பரிசு 5 ஆயிரத்து 1 மூன்றாம் பரிசு 3 ஆயிரத்து 1 என பத்து பரிசுகளை வழங்கினர். வேலூர் சலான் பேட்டை பகுதியைச் சேர்ந்த சிலம்பாட்ட மாணவர்கள் சிலம்பாட்டமும் பள்ளி மாணவிகள் பரதநாட்டிய கலை நிகழ்ச்சிகள் மற்றும் போட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாணவ மாணவிகள் இளைஞர்களுக்கு மாரத்தான் FINISHER CERTIFICATES மற்றும் மெடல் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் காலை உணவு வழங்கி முடிவில் ரோட்டரி சங்க செயலாளர் நன்றியுரை கூறினார்.
- வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
No comments:
Post a Comment