வேலூர் மாவட்டம் மகளை கர்ப்பமாக்கிய தந்தைக்கு ஆயுள் தண்டனை வழங்கிய நீதிமன்றம் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த சங்கர் (வயது 43) கடந்த 2022ம் ஆண்டு 13 வயதுடைய தனது மகளையே பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய குற்றத்திற்காக போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை வேலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், சங்கருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனையும், 2 வருட கடுங்காவல் சிறை தண்டனையும், பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
- வேலூர் தாலுகா செய்தியாளர் மு.இன்பராஜ்
No comments:
Post a Comment