மாநிலத் துணைத் தலைவர் நாமக்கல் பி பெருமாள் அவர்கள் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். மாவட்ட செயலாளர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஏ சாமிநாதன் அவர்கள் ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்தனர். மத்திய மாநில அரசுகளே வனவிலங்குகள் தொல்லையிலிருந்து விவசாயிகளை பாதுகாக்க கேட்டு வனவிலங்குகளால் உயிரிழக்கும் விவசாயிகளுக்கு ரூபாய் 25 லட்சம் நஷ்ட ஈடு உடனடியாக வழங்கிடு கேரள மாநிலம் போல காட்டுப்பன்றிகளை வனவிலங்குகள் பட்டியலில் இருந்து விடுவிக்க கேட்டு வன விலங்குகளால் பயிர் பாதிக்கும் காயம் அடையும் விவசாயிகளுக்கு நிவாரணம் உயர்த்தி விரைவில் வழங்குக குடியாத்தம் பேரணாம்பட் கே வி குப்பம் பகுதியை ஒருங்கிணைத்து ஓசூர் போல யானையை விரட்டும் குழுவினை குடியாத்தம் பகுதியில் அமைத்திடு 2005 ஆம் ஆண்டு வன உரிமை சட்டம் அமலாக்கு வன விலங்குகளை பாதுகாக்க வனங்களில் தண்ணீர் தொட்டி அமைத்திடு பசுமை காடுகளை உருவாக்க வன விவசாயிகள் ஆலோசனை கூட்டம் உயர் வருவாய் கோட்டாட்சியர் அவர்கள் தலைமையில் கூட்டி பேசிட நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
சோலார் மின் வேலி கண்காணிப்பு மையம் ஒலி எழுப்பும் கருவி வனத்துறை வேளாண்மை துறையினர் பரிந்துரை ஏற்றி அமைத்து வனவிலங்குகளை கட்டுப்படுத்து போன்ற கோஷங்களுடன் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
No comments:
Post a Comment