வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் கிழக்கு உள்வட்டம் கொண்ட சமுத்திரம் கிராமம் ராஜா கோயில் பகுதியில் சா்வே எண் 54 /1 பரப்பளவு 59.5 ஏர்ஸ் நிலத்தில் பாசன நீர் சேகரிக்கும் 8-அடி ஆழமுள்ள தொட்டியில் குடியாத்தம் ஆர் எஸ் அரசு பள்ளியில் படிக்கும் மாணவன் தமிழரசன் (வயது 16) த / பெ வேல்முருகன் தொட்டியில் குளிக்க வந்து நீரில் மூழ்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
உடன் படிக்கும் 6 பள்ளி மாணவர்களுடன் வந்துள்ளார் என தெரிய வருகிறது. இதுகுறித்து குடியாத்தம் நகர போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள் இறந்த தமிழரசன் உடல் கூறு ஆய்வுக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
No comments:
Post a Comment