வேலூர் இலவம்பாடி ஊராட்சி மன்றத் தலைவர் ஊழல் ஆட்சியர் அதிரடி உத்தரவு. - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 10 October 2023

வேலூர் இலவம்பாடி ஊராட்சி மன்றத் தலைவர் ஊழல் ஆட்சியர் அதிரடி உத்தரவு.


வேலூர் மாவட்டம், அணைகட்டு வட்டம், இலவம்பாடி ஊராட்சியில், ஊராட்சி மன்றத் தலைவர் எஸ்.ஜானகிராமன்.  ஊராட்சி மன்றத் தலைவராக இரண்டு முறை தலைவர் பதவி வகித்து அனுபவம் பெற்றவராவர். இந்த அனுபவத்தை குறிவைத்து மூன்றாவது முறையும் ஊராட்சி மன்றத் தலைவராகிவிட்டார். அரசு மக்கள் வரிப்பணத்தை செலவு செய்வதை சொந்த பணத்தை போல செலவு செய்யும் பழக்கத்தை உருவாக்கிக் கொண்டார்.  


மக்கள் வரிப்பணத்தை முறைகேடாக சொந்த பணம் போல் ஊராட்சி சட்டம் 1994ன் விதிகளை மீறி தவறான முறையில் பணத்தை சுரண்டியுள்ளார். பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை எதைக் கேட்டாலும் பணம் இல்லை  என்று கூறிவாராம் என தகவல் வெளியாகியுள்ளது. விதிமுறையை மீறி  நூற்றுக்கணக்காண போலீ பில் , போலி காசோலைகள், செட்டப் செய்து அந்த பில்களில் தேதி மற்றும் ஊராட்சி பெயர் என எந்த ஒரு விளக்கம் இன்றியும், ஜிஎஸ்டி வரி எண்கள் இன்றியும் ஏராளமான பில்கள் செட்டப் செய்து தயார் செய்து வைத்துக்கொண்டு வாழ்க்கையை ஜாலியாக ஓட்டிக்கொண்டு செலவு செய்து வந்துள்ளார் என்பது ஆதாரப்பூர்வமாக வெளிச்சமானது. இந்த ஊராட்சி பொதுமக்கள் ஏற்கனவே கூறி வந்த நிலையில் ஆவணங்களுடன் ஆதாரபூர்வமாக வெளிவந்துவிட்டது.


இதனையறிந்த ஊராட்சி பொதுமக்கள் மற்றும் ஆதாரப்பூர்வமான ஆவணங்களுடன் ஆட்சியரிடம் சமர்ப்பித்த உண்மை ஆவணங்களின் அடிப்படையில் வேலூர் மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன் உடனடியாக தனிக்குழு அமைத்து கள ஆய்வு செய்து தணிக்கை மாவட்ட அளவிலான அலுவலக உயர்பதவி ஊழியர்களை அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் முடிவில் சுமார் 45 லட்சத்திற்குமேல் போலி பில்களில் பணம் எடுக்கப்பட்டுள்ளதும், மேற்கொண்டதில் இலவம்பாடி ஊராட்சியில் சுமார் 45 லட்சத்திற்குமேல் போலி பில் போட்டு வவுச்சர் எழுதி செலவு செய்யப்பட்டதை உறுதிப்படுத்தினர். மேற்கண்ட தணிக்கை ஆய்வு செய்த குற்றச்சாட்டுகள் உறுதி செய்து இறுதி அறிக்கையாக தணிக்கையை ஆட்சியருக்கு வழங்கினர். 


வேலூர் மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன் அதிரடியாக மாவட்ட ஆட்சியருக்க உள்ள அவசரகால அதிகாரத்தை உபயோகித்து ஊராட்சிகள் சட்டம் 1994ன் பிரிவு 203ன் படி இளவம்பாடி ஊராட்சி மன்றத் தலைவருக்கு உள்ள அனைத்து பண பரிவர்த்தனை செய்யும் அதிகாரத்தையும் ரத்து செய்து அரசு காசோலை செக் பவரையும் கேன்சல் செய்து உத்தரவிட்டுள்ளார். அதிரடியாக உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொண்ட வேலூர் மாவட்ட ஆட்சியர் பெ. குமாரவேல் பாண்டியன் ஐஏஎஸ்  களஆய்வு தணிக்கை குழுவினர் அனைவரையும் ஊராட்சி பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். 


இது குறித்து சம்பந்தப்பட்ட துறை ஊழியர்கள் எவரேனும் சம்பந்தப்பட்டுள்ளனரா என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


- வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

No comments:

Post a Comment

Post Top Ad