மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான இலவச மருத்துவ முகாம். மாற்றுதிறன் அடையாள அட்டை வழங்கல். - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 12 October 2023

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான இலவச மருத்துவ முகாம். மாற்றுதிறன் அடையாள அட்டை வழங்கல்.


வேலூர் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகமும் இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம் காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் (இன்று) 12.10.2023 நடைபெற்றது. இம் மருத்துவ முகாமில் பிறப்பு முதல் 18 வயதுக்குட்பட்ட மாற்றுத்திறன் கொண்ட மாணவர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டனர்.

இந்த முகாமில் தேசிய அடையாள அட்டை புதுப்பித்தல், தனித்துவம் வாய்ந்த  அடையாள அட்டை வழங்குதல், தேவையான மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்குதல், படிப்பு உதவித்தொகை விண்ணப்பித்தல், பேருந்து பயண அட்டை,ரயில் பயண அட்டை மற்றும் ஆதார் அட்டை புதுபித்தல், முதலமைச்சர் காப்பீடு திட்ட அட்டை வழங்குதல் ஆகியவை சார்ந்து இந்த முகாம் நடைபெற்றது.


சிறப்பு முகாம் நடைபெறுவதற்காக மாவட்ட ஆட்சியர் அவர்களின் ஆணைப்படி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மற்றும் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்  மணிமொழி அவர்களுடைய வழிகாட்டுதலின்படியும், உதவி திட்ட அலுவலர் எஸ்.மகாலிங்கம் அவர்களின் ஆலோசனையின் படியும் இம்முகாம் நடைபெற்றது.


இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் கே எம் ஜோதிஸ்வரபிள்ளை தலைமை தாங்கினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ் மகேஸ்வரி, காட்பாடி வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு சாமுண்டீஸ்வரி,  ஜூனியர் ரெட் கிராஸ் மாவட்ட அமைப்பாளர் செ.நா.ஜனார்த்தனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  முகாமில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணன் மாணவர்களுக்கு மாற்று திறன் அடையாள அட்டைகளை வழங்கினார்.


மாற்றுத்திறனாளிகளுக்கான பதிவு மேற்கொண்டு, மருத்துவர்களின் ஆலோசனை பெறுவது குறித்த ஏற்பாடுகளை சிறப்பாசிரியர்கள் மற்றும் ஆசிரியர் பயற்றுனர்கள் மேற்கொண்டனர். இம்முகாமில் 97 மாற்று திறன் கொண்ட மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இதில் 51 பேருக்கு புதிய தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை பெற பதிவு செய்யப்பட்டது. மேலும் 21 பேருக்கு புதிய அடையாள அட்டையும், 20 பேருக்கு அடையாள அட்டை புதுபித்தும் வழங்கப்பட்டது.


- வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

No comments:

Post a Comment

Post Top Ad