வேலூர் மாவட்டம் குடியாத்தம் டாக்டர் கிருஷ்ணசுவாமி பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கூட்டம். - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 12 October 2023

வேலூர் மாவட்டம் குடியாத்தம் டாக்டர் கிருஷ்ணசுவாமி பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கூட்டம்.


வேலூர் மாவட்டம் குடியாத்தம் டாக்டர் கிருஷ்ணசுவாமி மெட்ரிக் பள்ளியில் நடந்து முடிந்த முதல் பருவத் தேர்வு முடிவின் அடிப்படையில் 6 முதல் 9ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளின் பெற்றோர்களுக்கு பள்ளி தாளாளர் டாக்டர் கிருஷ்ணசுவாமி தலைமையில், நிர்வாக அலுவலர் கே.மலர்விழி முன்னிலையில் பெற்றோர் ஆசிரியர் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 

பள்ளி முதல்வர் எம்.ஆர்.மணி அனைவரையும் வரவேற்றார். மாணவ, மாணவிகளின் கல்வி முன்னேற்றம் குறித்து பெற்றோரிடம் பள்ளி நிர்வாகம் ஆலோசனை நடத்தியது. பெற்றோர் நல்ல பல கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். பாடவாரியாக  ஆசிரிய, ஆசிரியைகள் அவர்தம் கருத்துக்களை கூறினர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆசிரியர்கள் சசிகுமார், ரேவதி, மோகனீஸ்வரி, ஆனந்தி ஆகியோர் செய்தனர். முடிவில் ஆசிரியை வாசுகி நன்றி கூறினார்.


- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad