வேலூர் மாவட்டம், குடியாத்தம் இன்னர் வீல் சங்கம் பேர்ணாம்பட் கிரீன் வேலி பள்ளி குடியாத்தம் யூரோ கிட்ஸ் மழலையர் பள்ளி இணைந்து உலக பெண் குழந்தைகள் தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இந்நிகழ்வில் குடியாத்தம் இன்னார் வீல் சங்கத் தலைவி கீதாலட்சுமி தலைமை தாங்கினார், செயலாளரும் பேர்ணாம்பட்டு கிரீன் வேலி பள்ளி தாளாளருமான ஆயிஷா ஜாவித் மற்றும் குடியாத்தம் யூரோ கிட்ஸ் பள்ளி நிர்வாக இயக்குனர் அருள் அவர்கள் வரவேற்றார். நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக குடியாத்தம் நகர மன்ற தலைவர் சௌந்தரராஜன் குடியாத்தம் நகர காவல் ஆய்வாளர் பார்த்தசாரதி கலந்து கொண்டு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
மேலும் இந்நிகழ்வில் இன்னர் வீல் சங்க உறுப்பினர்கள், நகர மன்ற உறுப்பினர்கள், கிரீன் வேலி பள்ளி நிர்வாகிகள் யூரோ கிட்ஸ் பள்ளி நிர்வாகிகள் முன்னுருக்கும் மேற்பட்ட மாணவர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
No comments:
Post a Comment