நிகழ்விற்கு மகளிர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் கோமதி குமரேசன் தலைமை தாங்கினார். வேலூர் மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் கிருஷ்ணவேணி ஜலந்தர், பேரணாம்பட்டு முன்னாள் ஒன்றிய குழு துணைத் தலைவர் தேவகிராணி ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரணியை வேலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சுரேஷ்குமார் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.
பேரணியில் வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் சங்கர், வீராங்கன், பெரியசாமி, செல்வகுமார், பேரணாம்பட்டு நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் முஜம்மில் அஹ்மத் MC, குடியாத்தம் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் விஜயன் MC, மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் விக்ரம், மாவட்ட எஸ்சி பிரிவு தலைவர் அன்பரசன், மாவட்ட சமூக ஊடக பிரிவு தலைவர் யுவராஜ், மாவட்ட அமைப்புசாரா தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் காளியப்பன், மாவட்ட துணைத் தலைவர் சக்கரவர்த்தி, ராகுல் விளையாட்டு அமைப்பின் மாநில தலைவர் ஆனந்தவேல், நகர, வட்டார நிர்வாகிகள் கோவிந்தசாமி, ரையான், சுஹேல், சீனிவாசன், சதீஷ், செல்வம் , செங்கையன், ஆனந்தராஜ், அப்பாஸ், இளமாறன், வழக்கறிஞர்.மோகன்ராஜ், இளங்கோவன், திவாகர், சேட்டு, சின்னராஜ், பொறியாளர் வினு, ஜானகிராமன், மதன், நபீல், புஷ்பாகரன், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார மகளிர் காங்கிரஸ் தலைவர் சரஸ்வதி நன்றியுரை கூறினார்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
No comments:
Post a Comment