வேலூர் மாவட்டம் குடியாத்தம், சேம்பள்ளி மதுரா ஜிட்டபல்லி கிராமத்தில் வசிக்கும் மஸ்தான் (வயது47) த/பெ. அப்துல் சமத் என்பவர் ஆங்கிலம்மருத்துவ படிப்பு படிக்காமல் ஆங்கிலம் மருத்துவம் பார்ப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் அவர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் மருத்துவ இணை இயக்குனர் பாலச்சந்தர்அவர்கள் அறிவுறுத்தல் பேரில் மருத்துவ அலுவலர் மாறன் பாபு அவர்கள் தலைமையில் கிராமிய காவல் உதவி ஆய்வாளர்கள் ஜெயந்தி வெங்கடேசன் தலைமை காவலர் ராமு ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்த்தபோது அங்கு ஆங்கிலம் மருந்து மாத்திரைகள் வைத்துக்கொண்டு போலி மருத்துவர் பார்த்து வருகிறார் மேலும் மஸ்தான் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
No comments:
Post a Comment