வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அருகே ஒதியத்தூர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகன் கவுதம்(வயது 18). வேப்பங்கால் பகுதியில் உள்ள நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
கவுதம் வீட்டில் இருந்து கல்லூரிக்கு டூ வீலரில் பள்ளிகொண்டா நோக்கி சென்றார். அப்போது கும்லாங்குட்டை பகுதியில் எதிரே வந்த மினி பஸ் இருசக்கர வாகனம் மீது நேருக்கு நேர் மோதியுள்ளது. படுகாயமடைந்த அவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து பள்ளிகொண்டா போலீசார் வழக்குப்பதிவு செய்து, கவுதம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
No comments:
Post a Comment