வேலூர் மாவட்டம் காட்பாடி பொன்னை அடுத்த புன்னைபுதூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அரசின் ஆயுஷ்மான் திட்டத்தின் கீழ் யோகா பயிற்சி வகுப்புகள் நிறுத்தப்பட்டனர்.
யோகா வகுப்புகள் மாதத்தில் இரண்டு நாட்கள் நடைபெற்று வருகிறது. அதன் படி நேற்று நடந்த யோகா பயிற்சி வகுப்பில் மாணவ, மாணவிகள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவரும் ஆர்வமுடன் கலந்து கொண்டு யோகா செய்தனர்.
இதில் மூச்சு பயிற்சி, தவம், முத்திரை பயிற்சிகள் மற்றும் இயற்கை முறையில் உணவு உட்கொள்வது உள்ளிட்டவை குறித்து யோகா ஆசிரியர் யோகநாதன் தலைமையில் வகுப்புகள் நடைபெற்றது. இதில் சுமார் 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
- காட்பாடி தாலுகா செய்தியாளர் கே எஸ் அருண்

No comments:
Post a Comment