மணல் கடத்திய வழக்கில் குண்டர் சட்டம் பாய்ந்தது. - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 23 November 2023

மணல் கடத்திய வழக்கில் குண்டர் சட்டம் பாய்ந்தது.


வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா  விருதம்பட்டு கிராமத்தை சேர்ந்த சகோதரர்கள் முனுசாமி மற்றும் குமரேசன் இவர்கள் இருவரையும் மணல் கடத்திய வழக்கில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மேல்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். 

மணல் கடத்தலில் தொடர்ந்து ஈடுபட்ட இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்யும்படி வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன்  வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியனுக்கு பரிந்துரை செய்தார். 


அதன் பேரில் முனுசாமி, குமரேசன் ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைது செய்வதற்கு ஆட்சியர் உத்தரவிட்டார். இதை அடுத்து அதற்கான ஆணையின் நகலை வேலூர் சிறை அலுவலர்களிடம் போலீசார் வழங்கினர்.


- காட்பாடி தாலுகா செய்தியாளர் கே எஸ் அருண்

No comments:

Post a Comment

Post Top Ad