வேலூர் மாவட்டம் குடியாத்தம் 29வது வார்டு உட்பட்ட புத்துக்கோவில் தெருவில் கால்வாய் பணி செய்வதற்கு காலை 11:30 மணியளவில் பூஜை துவங்கப்பட்டது.
இதில் சிறப்பு அழைப்பாளர்கள் சட்டமன்ற உறுப்பினர் K அமுலு விஜயன் அவர்களும் குடியாத்தம் நகராட்சி நகர மன்ற தலைவர் S சௌந்தர்ராஜன் மற்றும் நகராட்சி ஆணையாளர் மங்கை அரசன் அவர்களும் பொறியாளர் சார் அவர்களும் நகர மன்ற உறுப்பினர் K லாவண்யா குமரன் அவர்களும் ஒப்பந்ததாரர் DCN லோகு அவர்களும்மற்றும் ஊர் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூபாய் 5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து அளித்ததற்கு சட்டமன்ற உறுப்பினர் அவர்களுக்கும் நகர மன்ற தலைவர் அவர்களுக்கும் 29 வார்டு பொதுமக்களின் சார்பாக மிக்க நன்றி தெரிவித்தனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

No comments:
Post a Comment