குடியாத்தம் அருகே இளைஞர் தூக்கிட்டு தற்கொலை - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 23 November 2023

குடியாத்தம் அருகே இளைஞர் தூக்கிட்டு தற்கொலை


வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் தனகொண்ட பள்ளி மதுரா  சைனகுண்டா கிராமம் மாரியம்மன் கோவில் தெருவில் வசிக்கும் கோவிந்தன் மகன் உதய குமார் (வயது 25) என்பவர் இன்று தனது வீட்டில் குடும்ப தகராறு காரணமாக இன்று 23 11-2023 மாலை சுமார் 4:00 மணி அளவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை தாயார் கவிதா உடன் பிறந்த சகோதரி உமா ஆகியோர் குடும்ப உறுப்பினராக உள்ளார்கள். இவர் பால் டைரியில் பணிபுரிந்து வருகிறார் .இது சம்பந்தமாக குடியாத்தம் கிராமிய காவல் துறையினர் இறப்பு குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள் இறந்தவரின் உடலை கைப்பற்றி  பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவ பணிக்கு கொண்டு சென்றனர்.


- குடியேற்றம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்.

No comments:

Post a Comment

Post Top Ad