வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரம் பிச்சனூர் ராஜாக்கள் குள்ளப்ப முதலி தெருவை சேர்ந்த எஸ்.இந்துமதி தாய் தந்தையை இழந்தவர். இவருக்கு நாளை வெள்ளிக்கிழமை காளியம்மன் பட்டி சேர்ந்த சுரேஷ் என்பவர் உடன் திருமணம் நடைபெற உள்ளது.
ஆதரவற்ற இந்த மணப்பெண்ணுக்கு திருமண சீர்வரிசையாக ரோட்டரி சங்கத்தின் உடனடி முன்னாள் மாவட்ட ஆளுநர் ஜே. கே. என். பழனி,பத்திர எழுத்தர் நாகலிங்கம் ஏற்பாட்டில் கட்டில் ,பீரோ, பாய், தலையணை, அடுப்பு, மற்றும் பாத்திரங்கள் இன்று அந்த மணப்பெண்ணிடம் ஒப்படைக்கப்பட்டது.
குடியாத்தம் ரோட்டரி சங்க தலைவர் வாசுதேவன், முன்னாள் தலைவர்கள் ஆர்.கே.மகாலிங்கம், வி.என்.அண்ணாமலை, மற்றும் பரசுராமன், செந்தில், ரவி,சேட்டு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

No comments:
Post a Comment