தமிழ்நாடு கிராம ஊழியர்கள் சங்கம் நீதி கேட்கும் போராட்டம் மற்றும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம். - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 23 November 2023

தமிழ்நாடு கிராம ஊழியர்கள் சங்கம் நீதி கேட்கும் போராட்டம் மற்றும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.


வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று மாலை கிராம ஊழியர் சங்கம் சார்பாக நீதி கேட்கும் போராட்டம் மற்றும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு வட்டத் தலைவர் பிரகாசம் தலைமை தாங்கினார். வட்ட செயலாளர் மணிவண்ணன் வரவேற்புரை ஆற்றினார். நிகழ்ச்சியில் மாநில தலைவர் திருமலை வாசன் சிறப்புரை ஆற்றினார், மற்றும் வேலூர் மாவட்ட செயலாளர் துரைராஜ், துணைத் தலைவர் கோகுல் இணை செயலாளர் உமாபதி துணை செயலாளர் பழனிவேல் ஆகியோர் பங்கேற்றனர்.


பணியில் இருக்கும் கிராம உதவியாளர்கள் எவரேனும் இறந்து விட்டால் அதன் பிறகு அந்த குடும்பம் வாழ வழி தெரியாமல் தவிக்கும் என்பதை புறிந்து கொண்டு கடந்த 1999 ஆம் ஆண்டு அடிப்படையில் வாரிசுக்கு வேலை வழங்கினார்கள் ஆனால் அந்த உத்தரவு கடந்த  (8.3.2023) அன்று கருணையே இல்லாமல் நிறுத்தப்பட்டது.


ஊனமுற்றவர்கள் என்று சொன்னால் மனதளவில் அவர்கள் மனது புன்படுமோ என்பதை அறிந்து முன்னாள் முதல்வர் முத்தமிழ் கலைஞர் கருனாநிதி அவர்கள் மாற்றுத்திறனாளிகள் என்ற பெயரிட்டார் அப்படி தமிழ்நாடு முழுவதும் இருக்கும் பரிதாபத்திற்குரிய மாற்றுத் திறனாளிகள் மீது கருணை கொண்டு அவர்களின் வாழ்க்கை மேம்படுவதற்காக கோரிக்கையை நிறைவேற்றி கொடுக்கும் அந்த வேளையில் மாற்றுத்திறனாளிக்காக இருக்கும் கிராம உதவியாளர்கள் பெற்று வந்த எரிபொருள் பணபடி ₹2500  கருணையே காட்டாமல் நிறுத்தியது நியாயம்தானா (1.1.2023) க்கு பணிக்கு வந்தவர்களுக்கு பழைய முறையிலி லான ஓய்வு ஊதியம் வழங்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைக்கின்ற போது அதை நிறைவேற்றி கொடுக்கப்படவில்லை என்பது ஒருபுறம் இருக்க சிபிஎஸ் திட்டத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கும் இறந்து போனவர்களுக்கும் அவர்களிடம் பிடித்தம் செய்த தொகையை வழங்காமல் தொடர்ந்து காலம் வாழ்த்துவது நியாயமா என்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


இதில் 50க்கும் மேற்பட்ட கிராம உதவியாளர்கள் கலந்து கொண்டனர் இறுதியாக மணிகண்டன் நன்றி கூறினார்.


- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி.ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad