வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கார்த்திகேயபுரம் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர் இவரது மகள் பிரித்திங்கா (வயது 15) நடுப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார் இந்நிலையில் நேற்று மாலை பள்ளியில் இருந்து வீட்டுக்கு திரும்பவில்லை பெற்றோர்கள் பல இடங்களில் தேடி வந்த நிலையில் குடியாத்தம் கீழ் பட்டியை அடுத்த குருநாதபுரம் அருகே ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.
தகவல் அறிந்த ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து ரயில்வே போலிசார் விசாரணை செய்து வருகிறார்கள்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி.ராஜேந்திரன்.

No comments:
Post a Comment