வேலூர் கோடையிடி குப்புசாமி மாநகராட்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஜுனியர் ரெட்கிராஸ் அமைப்பு தொடக்கம். - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 23 November 2023

வேலூர் கோடையிடி குப்புசாமி மாநகராட்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஜுனியர் ரெட்கிராஸ் அமைப்பு தொடக்கம்.


வேலூர் மாவட்டம் வேலூர் மாநகராட்சி சைதாப்பேட்டையில் அமைந்துள்ள கோடையிடி குப்புசாமி மேல்நிலைப்பள்ளியில் ஜுனியர் ரெட்கிராஸ் அமைப்பு தொடக்கி வைக்கப்பட்டது.


6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் கல்வி இணை செயல்பாடுகளாக உள்ள பல்வேறு அமைப்புகளில் ஜுனியர் ரெட்கிராஸ் அமைப்பும் ஒன்றாகும் இதன் தொடக்க விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. 


நிகழ்விற்கு பள்ளி தலைமையாசிரியை பேபி தலைமை தாங்கினார்.  பள்ளி ஜுனியர் ரெட்கிராஸ் ஆலோசகர் ஆசிரியை ரம்யா வரவேற்று பேசினார். ஜுனியர் ரெட்கிராஸ் அமைப்பின் வேலூர் மாவட்ட அமைப்பாளர் செ.நா.ஜனார்த்தனன் பள்ளி அமைப்பினை தொடக்கி வைத்து பின்னர் மாணவர்களுக்கான பயிற்சி கையேட்டினை வழங்கி பேசினார் அப்போது அவர் கூறியதாவது, இந்த அமைப்பின் கொள்கைகளாக சுகாதாரம் சேவை நட்பு என்ற அடிப்படையில் மாணவர்கள் காலை உணவு தவிர்க்கவே கூடாது மேலும் நாம் ஆராக்கியமாக இருந்தால் தான் சேவை செய்யமுடியும் எனவே நம் ஒவ்வொருவரின் ஆராக்கியம் முக்கியம் எனவே நாம் ஆரோக்கியமாக இருக்க சரிவிகித உணவினை உட்கொள்ள வேண்டும் முடிந்த சேவைகளை செய்வோம் நல்ல நட்பினை பெறுவோம் பள்ளியில் கல்வி இணை செயல்பாடுகளில் பங்கேற்போம் அதே வேளையில் கல்வியிலும் அதிக கவனம் செலுத்துவோம் என்றார். 


நான் படித்த இப்பளியில் மாணவர்கள் அனைவரும் சிறப்பாக கல்வி பெற வாழ்த்துகிறேன் என்றார். ஆசிரியர்கள் ஜானகி, பரணி உட்பட ஜுனியர் ரெட்கிராஸ் அமைப்புடன் இணைந்துள்ள மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.


- வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்

No comments:

Post a Comment

Post Top Ad