வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம். - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 23 November 2023

வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்.


வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரம்  & கிராமம் வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் எதிர்வரும் 25, 26 ( சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

இது சம்பந்தமாக பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும்  பொருட்டு நகராட்சி மேல்நிலைப்பள்ளி மாணவர்களால் மனித சங்கிலி பேரணி இன்று  23:11: 2023 இன்று காலை 11 மணி அளவில் பேரணி நடத்தப்பட்டது.


இந்தப் பேரணியில் குடியாத்தம் வட்டாட்சியர் சித்ராதேவி தேர்தல் துணை வட்டாட்சியர் வாசகி நகராட்சி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை கீதா கிழக்கு வருவாய் ஆய்வாளர் பலராமன் பாஸ்கர் நகர கிராம நிர்வாக அலுவலர் சபரிமலை மற்றும் கிராம உதவியாளர்கள் மாணவர்கள் பேரணியில் கலந்து கொண்டனர்.


- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad