ஆதரவற்ற சடலம் அடக்கம் செய்த சமூக ஆர்வலர். - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 20 November 2023

ஆதரவற்ற சடலம் அடக்கம் செய்த சமூக ஆர்வலர்.

வேலூர் மாவட்டம், குடியாத்தம் சந்தப்பேட்டை செக்கு மேட்டு தெருவை  சேர்ந்த  (வயது 70) மதிக்கத்தக்க மூதாட்டி நீலாவதி,  இவரது கணவர் இறந்துவிட்டார். உறவினர்கள் யாரும் இல்லாத நிலையில், நகர பகுதிகளில் சுற்றி திரிந்து வந்தார். (19.11.2023) இரவு கவுண்டன்ய மகாநதி தரைப்பாலம் அருகே தண்ணீர் குட்டையில் மூழ்கி, இயற்கை எய்தினார். 

அந்த மூதாட்டிக்கு உறவினர்கள் யாரும் இல்லாத நிலையில் குடியாத்தம் டவுன் போலீஸ் நிலைய  அதிகாரிகள் வேண்டுகோளுக்கிணங்க, குடியாத்தம் அரசு மருத்துவமனையில் இருந்த மூதாட்டியின் உடலை பிரேத பரிசோதனைக்கு பிறகு சமூக சேவகர் எம்.கோபிநாத்  பெற்றார். குடியாத்தம் நகராட்சியின் வழிகாட்டுதலின்படி   உரிய மரியாதையுடன் இறுதிச்சடங்குகள் செய்தார். பின்னர் அவர் தனது சொந்த செலவில் குடியாத்தம் சுண்ணாம்புபேட்டை இடுகாட்டில்  நல்லடக்கம்  செய்தார்.


அம்மையாரின் உடல் நல்லடக்கம் செய்ய ஆசிரியர் கணேசன், காங்கிரஸ் மாவட்ட பொதுச்செயலாளர் பாரத் நவீன் குமார், மற்றும் பாரத் மகேந்திரன் என்ற புல்லட் மகி  ஆகியோர் உடன் இருந்து உதவி செய்தனர். அம்மையாரது சடலம் நல்லடக்கம் செய்ய குடியாத்தம் நகர காவல் நிலைய பெண் போலீஸ் வேண்டாமணி அவர்கள் கோபிநாத்துக்கு உரிய சான்றுகளை வழங்கி உதவியாக இருந்தார்.


- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்.

No comments:

Post a Comment

Post Top Ad