தியாகி குமரன் தொண்டு அறக்கட்டளை சார்பில் இன்று குழந்தைகள் தின விழா. - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 19 November 2023

தியாகி குமரன் தொண்டு அறக்கட்டளை சார்பில் இன்று குழந்தைகள் தின விழா.


வேலூர் மாவட்டம் குடியாத்தம் சுந்தர வித்யாலயா பள்ளியில் தியாகி  குமரன் தொண்டு அறக்கட்டளையின் மாநில பொருளாளர் பேராசிரியர் வே.வினாயகமூர்த்தி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

மாநில செயலாளர் எஸ்.சுரேஷ், அமைப்புச் செயலாளர் க.சையத் அலீம் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் பள்ளிக் குழந்தைகளுக்கு கட்டுரை எழுதுதல் ,ஓவியம் வரைதல் மற்றும் பேச்சுப்போட்டி  நடத்தப்பட்டது. இப் போட்டியில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.


மேற்குறிப்பிட்ட போட்டியில் சிறப்பித்த மாணவர்களுக்கும்  குடியாத்தம் நகரில் தற்காப்பு கலையில் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொண்டு சாதனை படைத்த மாணவர்களுக்கும் இவர்களை பயிற்றுவித்த மாஸ்டர் ப.பொன்னரசு அவர்களுக்கும் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்ட குடியாத்தம் நகரமன்ற தலைவர் எஸ். சௌந்தர்ராசன் அவர்கள் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் நினைவு பரிசு வழங்கி பாராட்டினார்.


இவ்விழாவில் கவிஞர் முல்லைவாசன், கவிஞர் சகுவரதன், இஸ்லாமிய பள்ளி உதவி தலைமை ஆசிரியர் வே.ஆனந்தன், சமூக ஆர்வலர் வெ.ர.நபீஸ் அஹமத், சுந்தரர் வித்யாலயா பள்ளி நிர்வாகி R.E.சரவணகுமார் ஆகியோர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துக்கொண்டனர். நிகழ்ச்சியை மாவட்ட நிர்வாகிகள் முருகன் மற்றும் ஞானகுமார் ஆகியோர்கள் ஒருங்கிணைத்தார்கள்.


- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்.

No comments:

Post a Comment

Post Top Ad