மாணவர்களின் கல்வி இணை செயல்பாடுகளாக உள்ள பல்வேறு அமைப்புகளில் ஜுனியர் ரெட்கிராஸ் அமைப்பும் ஒன்றாகும் இதன் பயிற்சி கருத்தரங்கம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்விற்கு பகவான் மகாவீர் தயாநிகேதன் ஜெயின் பள்ளியின் அறங்காவலர் கே.ராஜேஸ்குமார் ஜெயின் தலைமை தாங்கினார்.
முன்னதாக பள்ளி முதல்வர் எம்.மாலதி வரவேற்று பேசினார். பள்யியின் கல்வி ஆலோசகர் எஸ்.கீதாசுரேஷ் முன்னிலை வகித்தார். ஜுனியர் ரெட்கிராஸ் அமைப்பின் வேலூர் மாவட்ட அமைப்பாளர் செ.நா.ஜனார்த்தனன் மாணவர்களுக்கான பயிற்சி கையேட்டினை வழங்கி பள்ளி அமைப்பினை தொடக்கி வைத்து பேசினார் அப்போது அவர் கூறியதாவது, இந்த அமைப்பின் கொள்கைகளாக சுகாதாரம் சேவை நட்பு என்ற அடிப்படையில் மாணவர்கள் காலை உணவு தவிர்க்கவே கூடாது மேலும் நாம் ஆராக்கியமாக இருந்தால் தான் சேவை செய்யமுடியும் எனவே நம் ஒவ்வொருவரின் ஆராக்கியம் முக்கியம் எனவே நாம் ஆரோக்கியமாக இருக்க சரிவிகித உணவினை உட்கொள்ள வேண்டும் முடிந்த சேவைகளை செய்வோம் நல்ல நட்பினை பெறுவோம் பள்ளியில் கல்வி இணை செயல்பாடுகளில் பங்கேற்போம் அதே வேளையில் கல்வியிலும் அதிக கவனம் செலுத்துவோம் என்றார்.
ஜுனியர் ரெட்கிராஸ் அமைப்பில் இணைந்துள்ள மாணவர்கள் கொள்கைகள், உறுதிமொழி, ஜுனியர் ரெட்கிராஸ் பாடல், உள்ளிட்ட பயிற்சிகளை மேற்கொண்டனர். பள்ளியின் ஆலோசகர் ஆர்.சரண்யா நன்றி கூறினார்.
- வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்.

No comments:
Post a Comment