வேலூர் மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பு. - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 23 November 2023

வேலூர் மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பு.


வேலூர் மாவட்டம் மாநகராட்சி கூட்டம் இன்று நடைபெற்றது, மண்டலகுழுதலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் என வேலூர் மாநக ராட்சி கூட்டத்தில் புஷ்பலதா வன்னிய ராஜன் மிரட்டல் விடுத்தார்.

வேலூர் மாநகராட்சி யின் மாதாந்திரக் கூட்டம் இன்றுகாலை அலுவலகக் கட்டத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாநகராட்சி ஆணையாளர் ஜானகிரவீந் திரன் தலைமை தாங்கினார். இதில் மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில் குமார் வேலூர்  எம்எல்ஏ கார்த்திகேயன் மற்றும் கவுன்சிலர் கள் கலந்து கொண்டனர். கூட்டம் தொடங்கியது முதல் கவுன்சிலர்கள் அனைவரும் தங்கள் வார்டுகளில் உள்ளகுறைகளை சுட்டிக்காட்டி பேசினார்கள்.


குறிப்பாக தி.மு.க. கவுன்சிலர்கள் தங்கள் வார்டுகளில் எந்தவித அடிப்படை வசதிக்கான பணிகள் சரிவர நடைபெறவில்லை என்றும் சாலைகள் குண்டும், குழியுமாகஉள்ளன. ரோட்டில்கழிவுநீர் ஆங்காங்கே ஓடுகிறது. மக்கள் சுடும் அதிருப்தியில் உள்ளனர். அடுத்தமுறை அவர்களிடம் சென்று வாக்கு கேட்க முடியாத நிலை உள்ளது. எனவே தங்கள் வார்டுகளில் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.


அப்போதுதிடீரென 1- ஆவது மண்டல குழு தலைவர் புஷ்பலதா வன்னியராஜா திடீரென குறுக்கிட்டார். எனது மண்டலத்தில் எந்தவித அடிப்படை வசதியும் இதுவரைசெய்து தரவில்லை. மண்டல குழு தலைவ ரான எனக்கு எந்தவித அதி காரமும் இல்லை. பணி செய்வதற்கு நிதி எதுவும் ஒதுக்கவில்லை. எனவே நான் எனது பதவியை ராஜினாமா செய்யப் போகிறேன் என ஆவேசமாக பேசினார். இதனால் மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


அப்போது குறிப்பிட்ட ஆணையாளர் ஜானகிரவீந் திரன் 1-ஆவது மண்டலத் திற்கு தேவையான அடிப் படை வசதிகளை உடனே செய்து தருவதாக உறுதி அளித்தார். இந்த நிலையில் தமிழக தி.மு.க.கவுன்சிலர் கணேஷ் சங்கர் இந்திய கிரிக்கெட் அணியின் நீல நிற சட்டையை அணிந்து வந்து மேலும் பரபரப்பை ஏற்படுத்தினார்.


- வேலூர் மாவட்ட தாலுகா செய்தியாளர் இன்பராஜ் 

No comments:

Post a Comment

Post Top Ad