பைக் மீது லாரி மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி. - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 30 November 2023

பைக் மீது லாரி மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி.

காட்பாடி எம்ஜிஆர் நகர் ஏழாவது வழக்கு தெருவை சேர்ந்தவர் சண்முகம் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அதிகாரி. இவரது மகன் ஸ்ரீஹரி பரத், ராணிப்பேட்டை சிப்காட் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மோட்டார்சைக்கிளில் வேலைக்கு சென்றுள்ளார். 

சித்தூர் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஏறந்தாங்கல் பகுதியில் சென்ற பொழுது எதிரே வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ஸ்ரீஹரி பரத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது பற்றிய தகவல் அறிந்த திருவலம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் இறந்த ஸ்ரீஹரிவரத்துக்கு கடந்த ஆண்டு தான் திருமணம் நடந்தது ஒரு கைக்குழந்தையும் உள்ளது.


- காட்பாடி தாலுகா செய்தியாளர் கே எஸ் அருண்

No comments:

Post a Comment

Post Top Ad